91 வயதில் காதலில் விழுந்த பிரபல தொழிலதிபர்! சொத்து மதிப்பு ரூ.3 லட்சம் கோடி
ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கு உரிமையாளரான பிரபல தொழிலதிபர் மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.
91 வயதில் மீண்டும் காதல்
பிரபல DLF குழுமத்தின் முன்னாள் தலைவரான குஷால் பால் சிங் (Kushal Pal Singh), இப்போது தனது 91 வயதில் மீண்டும் காதலில் விழுந்துள்ளார்.
கே.பி. சிங் என பிரபலமாக அறியப்படும் குஷால் பால் சிங் 91 வயதில் காதலிக்க என்ன காரணம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
PTI
டிஎல்எஃப் குழுமத்தின் முன்னாள் தலைவர் குஷால் பால் சிங்கின் மனைவி இந்திராவுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் ஏற்பட்டது. அதைச் சரி செய்ய பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனில்லாமல் அவர் கடந்த 2018-ல் உயிரிழந்தார்
65 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மனைவி
65 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்த மனைவியை இழந்ததால் கே.பி. சிங் மன ரீதியாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். இதையடுத்து டிஎல்எஃப் குழுமத்தின் செயல் பணிகளில் இருந்தும் அவர் விலகினார்.
சில மாதம் ஓய்வில் இருந்த சிங், இப்போது மீண்டும் காதலில் விழுந்துள்ளார். இது தொடர்பாகப் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "அவள் பெயர் ஷீனா (Sheena). என் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களில் அவரும் ஒருவர்.. அவர் மிகவும் ஆற்றல் மிக்கவர்..
எனது மனைவியின் மறைவுக்குப் பிறகு முதல் சில நாட்களில் ரொம்பவே தனிமையை உணர்ந்தேன். எனக்கு இத்தனை ஆண்டுகள் ஒரு அற்புதமான திருமண வாழ்க்கை கிடைத்தது.
BLOOMBERG NEWS
மறைந்த எனது மனைவி இந்திரா எனது துணை மட்டுமல்ல, சிறந்த நண்பரும் கூட.. 65 ஆண்டுகளுக்குப் பிறகு பாட்னரை இழப்பது ஒருவித மனச்சோர்வையே ஏற்படுத்துகிறது. இதன் காரணமாகவே டிஎல்எப் நிறுவனத்தின் ஆக்டிவ் பணிகளில் இருந்து பின்வாங்க நான் முடிவு செய்தேன்.
மனைவியின் இழப்பால் தனிமையில் தள்ளப்பட்டேன். முதல் சில நாட்களுக்கு என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. இப்போது எனக்கு புதிய பாட்னர் கிடைத்துள்ளார். அவர் தொடர்ந்து என்னை ஊக்குவிக்கிறார். நான் சோர்வாக இருக்கும் போதெல்லாம் அவர் என்னை ஊக்குவிக்கிறார். அவருக்கு உலகம் முழுவதும் பல அற்புதமான நண்பர்கள் உள்ளனர். அவர்களுடன் அவர் பயணம் செய்கிறார். நானும் இதுபோல பயணம் செய்ய விரும்புகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.
ரூ.3 லட்சம் கோடி சொத்து மதிப்பு
குஷால் பால் சிங், வெளிநாடுகளில் தனது கல்லூரி படிப்பை முடித்த அவர், தனது மாமனாரின் டிஎல்எஃப் நிறுவனத்தில் 1961-ஆம் ஆண்டில் வேலைக்குச் சேர்ந்தார். சுமார் 50 ஆண்டுகள் தலைமை பொறுப்பில் இருந்த அவர், 202-ல் தனது பதவி விலகினார்.
இவரது காலத்தில் தான் டிஎல்எப் நிறுவனம் நில அதிர்வுகளைத் தாங்கும் வகையில் பல கட்டிடங்களை வெற்றிகரமாகக் கட்டினர். கடந்த 2008-ல் அதிகபட்சமாக இவர், உலகின் 8-ஆவது பெரிய பணக்காரர் என்ற இடத்திற்கு வந்தார். இப்போது அவரது சொத்து மதிப்பு 8 பில்லியன் டொலர் (இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ.3 லட்சம் கோடி) ஆகும்.