3 மாதங்களில் ரூ.773 கோடி லாபம் ஈட்டிய இந்திய சில்லறை விற்பனை நிறுவனம்!
இந்திய சில்லறை விற்பனை நிறுவனமொன்று, மூன்றே மாதங்களில் ரூ.773 கோடி லாபம் ஈட்டியுள்ளது.
டி-மார்ட் (D-Mart) என்ற பெயரில் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்தி வரும் அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் லிமிடெட் இந்த நிதியாண்டின் (2024-25) முதல் காலாண்டின் நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட லாபம் ரூ.773.68 கோடியாக இருந்தது.
விற்பனை அதிகரிப்பு காரணமாக, கடந்த ஆண்டு இதே காலாண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ.658.71 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் 17.45 சதவீத வளர்ச்சியைக் காட்டியது.
மறுஆய்வுக் காலத்தில், நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 18.57 சதவீதம் அதிகரித்து ரூ.11,865.44 கோடியிலிருந்து ரூ.14,069.14 கோடியாக அதிகரித்துள்ளது.
இயக்க செலவுகள் 18.62 சதவீதம் அதிகரித்து ரூ.13,056.61 கோடியாக உள்ளது.
இதன்போது, அவென்யூ சூப்பர்மார்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, எம்.டி.நெவில் நோரோன்ஹா, கடந்த காலாண்டில் ஆறு புதிய கடைகள் திறக்கப்பட்டதன் மூலம் மொத்த எண்ணிக்கை 371-ஐ எட்டியுள்ளதாக்க கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
DMart Profit, D-Mart, DMart Retailer corporation, DMart Supermarkets