அள்ளி அள்ளிக் கொடுத்த கறுப்பு MGR., கேப்டன் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு
மக்களால் 'கறுப்பு எம்ஜிஆர்' என அன்போடு அழைக்கப்பட்ட, மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் சொத்துக்கள், பிற விவரங்கள் பற்றி பார்க்கலாம்.
முன்னாள் தமிழ் நடிகரும், தேமுதிகவின் நிறுவனரும் தலைவருமான விஜயகாந்த் டிசம்பர் 28 அன்று தனது 71வது வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.
தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு ஆதிக்க கட்சிகளுக்கு ஒரு யதார்த்தமான மாற்றாக அவரது ரசிகர்கள் மற்றும் பின்பற்றுபவர்களுக்கு நம்பிக்கையைப் புகுத்தியவர். அவரது கருணைக்காக 'கருப்பு எம்ஜிஆர்' என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்.
கடந்த 4-5 ஆண்டுகளாக விஜயகாந்தின் உடல்நிலை மோசமடைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த டிசம்பர் 14 அன்று, அவரது மனைவி பிரேமலதா அதிகாரப்பூர்வமாக தேமுதிகவின் கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டார் மற்றும் ஒரு கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.
விஜயகாந்தின் சொத்து மதிப்பு
Myneta.info-ல் உள்ள தரவுகளின்படி, விஜயகாந்தின் 2016-ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் போது அவர் சமர்ப்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், அவரது மொத்த சொத்துத் மதிப்பு ரூ.53 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் இரண்டும் அடங்கும்.
அவரது அசையா சொத்துக்கள் ரூ.38 கோடிக்கும் அதிகமாகவும், அவரது அசையும் சொத்துக்கள் ரூ.14 கோடிக்கும் அதிகமாக உள்ளது. அவர் செலுத்திய கடன்களின் மொத்த மதிப்பீடு 14.72 கோடி என கூறப்படுகிறது.
விஜயகாந்தின் மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதி ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம், Captain Farms Private Limited வாயிலாக உள்ளது. மேலும் எதிர்காலத் தேவைக்காகத் தபால் நிலைய திட்டங்கள், National Service Scheme போன்ற மத்திய அரசு முதலீட்டு திட்டத்தின் வாயிலாகச் சுமார் ரூ. 2 கோடிக்கு முதலீடு செய்து சேமித்து வைத்துள்ளார்.
விஜயகாந்திடம் Mercedes Benz, Ford Endevour, Honda, Volkswagen, Volvo பிராண்டுகளில் கார்களும், RoyalEnfield பைக், 2 Tempo Travellor ஆகிய வாகனங்கள் உள்ளன.
அண்ணனிடம் ரூ.5000 கடன் வாங்கித் தொழில் தொடங்கியவர்., இன்று ரூ.14,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு அதிபதி
மேலும், 2016 தேர்தலில் போட்டியிடும்போது விஜயகாந்த் குடும்பத்தில் 2.35 கிலோ தங்கம், 70 கிலோ வெள்ளி இருந்ததாகத் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி, விவசாய நிலங்கள், விவசாயம் அல்லாத ரூ.11 கோடி மதிப்பிலான நிலங்கள், ரூ.1 கோடி மதிப்பிலான வீடு வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
DMDK Chief Vijayakanth, Captain Vijayakanth, Vijayakanth Sothu Mathippu, Actor Vijayakanth Passed Away, Karuppu MGR Vijayakanth, Vijayakanth Net Worth