வதந்திகளை நம்ப வேண்டாம், பிறந்தநாளில் உங்களை சந்திக்கிறேன் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தனது பிறந்தநாளான ஆகத்து 25ஆம் திகதி (நாளை) தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி தொண்டர்களை சந்திக்க உள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் அறிக்கை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் குறித்து செய்திகளை உலா வந்த நிலையில், என்னைப் பற்றிய வதந்திகளை நம்ப வேண்டாம் என அவரது தரப்பில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அறிக்கையில், தனது பிறந்த நாளில் கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் விஜயகாந்த் நேரில் சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 'என்னுடைய உடல்நலம் குறித்த வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம்.
என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், என் தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன்' என விஜயகாந்த் கூறியதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#தேமுதிக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் #கேப்டன் #விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள் #வறுமை #ஒழிப்புதினம் அறிக்கை - 23.08.2023#dmdkofficial#dmdkparty pic.twitter.com/0533RONH5R
— DMDK Party (@dmdkparty2005) August 23, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |