மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியான அதிகாரப்பூர்வ தகவல்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தலைமை கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இன்று அதிகாலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி அக்கட்சியினரிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூச்சு திணறல் காரணமாக விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் விஜயகாந்த் உடல்நிலை குறித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் வழக்கமாக மேற்கொள்ளும் மருத்துவ பரிசோதனைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவனை நிர்வாகம் தெரிவத்துள்ளது. மேலும் சிகிச்சை முடிந்து ஓரிரு தினங்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார்.
எனவே பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என தலைமை கழகம் அறிவித்துள்ளது.
#captainvijaykanth #dmdk pic.twitter.com/PGRMXCKSKO
— vengai R.L.Venkatesan (@RLvenkatesan) May 19, 2021
கடந்த ஆண்டு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குணமடைந்து வீடு திரும்பினார் என்பது நினைவுக் கூரத்தக்கது.