திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது - எந்த தொகுதியில் யார் போட்டி?
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக போட்டியிடும் 164 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
திமுக வேட்பாளர்கள் பட்டியல்
இதில், பெண்கள் 18 பேர், முனைவர் 7 பேர், சட்டம் படித்தவர்கள் 29 பேர், மருத்துவர்கள் 15, பட்டம் பெற்றவர்கள் 125 பேர் ஆவார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கத்திலும் போட்டியிட உள்ளனர்.
சமீபத்தில் திமுகவில் இணைந்த முன்னாள் முதல்வர், ஓ.பன்னீர் செல்வம் போடியில் போட்டியிட உள்ளார்.
கடந்த முறை கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி தற்போது கோவை தெற்கில் போட்டியிட உள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தல் - 2026
— DMK (@arivalayam) March 28, 2026
திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் பட்டியல்!#DMKWins2026 pic.twitter.com/A3ZuIEHsgf
அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், மனோ தங்கராஜ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. கயல்விழி செல்வராஜின் தாராபுரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் இந்திராணி போட்டியிடுகிறார். மனோ தங்கராஜின் பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |