தவெகவிற்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த திமுக - களத்தில் இறங்கும் விஜய்
2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து களமிறங்கிய விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார்.
கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விடயம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
தவெக சிறப்பு பொதுக்குழு
அத்தோடு பிரச்சாரத்தை நிறுத்திய விஜய் அதன் பின்னர் வெளியே வரவில்லை. கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்கு இருந்ததால் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவர்களும் தலைமறைவாக இருந்தனர்.

இதனால் கட்சியின் செயல்பாடு மொத்தமாக முடங்கி இருந்தது. இரு நாட்களுக்கு முன்னர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார். தற்போது, மீண்டும் தீவிர அரசியலுக்குள் விஜய் இறங்க உள்ளார்.
வரும் நவம்பர் 5 ஆம் திகதி மாமல்லபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் அடுத்த கட்ட தொடர் நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, சிறப்பு பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) October 29, 2025
இதன் பின்னர், விஜய்யின் பிரச்சார பயணத்திட்டம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் SIR
தமிழ்நாடு உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இரண்டாம் கட்டமாக சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் பணிக்கான(SIR) அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் என்ற பெயரில் தமிழக மக்களின் வாக்குரிமையை பறிக்கும் சதி திட்டமாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கருதுகின்றன.

இதனை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க, வரும் நவம்பர் 2 ஆம் திகதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தவெகவிற்கு திமுக நேரில் அழைப்பு
திமுக சார்பில் வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகம் வந்து பொதுச்செயலாளர் ஆனந்திடம் நேரில் அழைப்பு விடுத்துள்ளார்.
#TVKVijay #Vijay
— Thamaraikani (@kani_twitz24) October 29, 2025
நவம்பர் இரண்டாம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்திற்கு, தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்திற்கு நேரில் சென்று திமுக சார்பில் அழைப்பு விடுத்தார் பூச்சி முருகன்@arivalayam @TVKVijayHQ pic.twitter.com/0JqVTzkDnJ
“தமிழ்நாட்டில் SIR என்ற பெயரில் வாக்காளர்களை நீக்குவதோ, இணைப்பதோ கண்டனத்திற்குரியது. இதனை தவெக எதிர்க்கிறது" என தவெக கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் கருத்து தெரிவித்துள்ள நிலையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் SIR க்கு அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் தவிர்த்து பிற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாம் தமிழர் கட்சியும் SIR-யை எதிர்ப்பதாக அறிவித்துள்ள அதேவேளையில், அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என அறிவித்துள்ளது.
தவெக அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளுமா அல்லது புறக்கணிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |