விரைவில் திமுக ஆட்சி உதயமாகத்தான் போகிறது- மு.க.ஸ்டாலின் பேச்சி
DMK Leader Stalin Impending Government Change- தமிழ்நாட்டில் விரைவில் திமுக ஆட்சி அமையும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் பேச்சி
திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேருவின் சகோதரர் இல்லத் திருமண விழா சென்னை நீலாங்கரையில் நடைபெற்றது.
இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக மோசமான ஆட்சி நடைபெற்று வருவதாக விமர்சித்தார்.
மக்கள் எதிர்பார்த்த மாற்றத்திற்குப் பதிலாக ஏமாற்றமே கிடைத்துள்ளதாகக் கூறினார்.

திரையில் கதாநாயகனாக நடித்து, நிஜத்தில் ஒரு வில்லனாக உலா வந்து கொண்டிருப்பவர்தான், இன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார்.
மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், இதுபோன்ற சம்பவங்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
காரமடை பகுதியில் ஒன்றியச் செயலாளர் தலைமறைவானது, மக்கள் பிரதிநிதி மீது தாக்குதல் நடத்தப்பட்டது உள்ளிட்ட சம்பவங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியர் தொடர்பான விவகாரத்தில் முதலமைச்சர் மௌனம் காப்பதாகவும் விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றும், மீண்டும் திமுக ஆட்சி அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |