திமுக கோட்டையாகும் சென்னை! 16 தொகுதிகளிலும் அதிமுக பின்னடைவு
சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலைப்பெற்றுள்ளது.
சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் வேளச்சேரியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் திமுக தனது வேட்பாளர்களை களமிறக்கியது.
வேளச்சேரி தொகுதியை கூட்டணி கட்சியான காங்கிரஸிக்கு வழங்கியது, வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.எச்.ஹஸ்ஸான், அதிமுக வேட்பாளர் எம்.கே.அசோக்கை எதிர்த்து களமிறங்கினார்.
இன்று மே 2 வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி சென்னையில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலைப்பெற்றுள்ளது.
பெரம்பூர் - ஆர்.டி.சேகர், தி.நகர் - ஜெ.கருணாநிதி, ஆர்.கே.நகர்- ஜே.ஜே.எபினேசர், எழும்பூர் - பரந்தாமன், திரு.வி.க நகர் - தாயகம் கவி, விருகம்பாக்கம் - பிராபகர் ராஜா, அண்ணாநகர்- எம்.கே.மோகன், ராயபுரம் - இரா.மூர்த்தி, அவில்லிவாக்கம் - வெற்றி அழகன், கொளத்தூர்- ஸ்டாலின், சேப்பாக்கம் - உதயநிதி, ஆயிரம்விளக்கு- எழிலன், மயிலாப்பூர்- த.வேலு, துறைமுகம் - சேகர் பாபு, சைதாப்பேட்டை - மா.சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலைப்பெற்றுள்ளனர்.
வேளச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜே.எம்.எச்.ஹஸ்ஸான் முன்னிலை பெற்றுள்ளார்.
தொடரந்து வாக்கு எண்ணிகை நடைபெற்று வரும் நிலையில் அடுத்தடுத்த சுற்றில் நிலவரம் எப்படி வேண்டுமானாலும் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.