சமீபத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட கணவன்! தேர்தலில் நின்று அபார வெற்றி பெற்ற மனைவி
சென்னையில் வெட்டி கொலை செய்யப்பட்ட திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்ட செயலாளர் செல்வம் என்பவர் சமீபத்தில் வெட்டி கொல்லப்பட்டார். செல்வத்தின் வீட்டின் அருகே கும்பலாக வந்தவர்கள், அவருக்கு சால்வை அணிவிப்பது போல் நடித்து, செல்வத்தை நெருங்கி, வெட்டிச் சாய்த்தனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வேட்பாளராக அவர் களமிறங்க இருந்தார்.
இந்த நிலையில் செல்வம் இடத்தில் திமுக சார்பில் அவர் மனைவி சமீனா வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் சென்னை மாநகராட்சி மண்டலம் 14,வார்டு எண் 188ல் போட்டியிட்ட சமீனா 2,975 வாக்கு வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார்.
இதையடுத்து தான் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை அவர் பெற்று கொண்டார்.