லண்டன் மாரத்தானில் கலந்து கொண்ட தமிழக அமைச்சர்: மகனுடன் 21.1 கி மீ தூரத்தை ஓடிக் கடந்து அசத்தல்
பிரித்தானிய தலைநகர் லண்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
லண்டன் மாரத்தானில் ஓடிய தமிழக அமைச்சர்
தமிழகத்தின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இளைஞர்கள் மத்தியில் உடற்பயிற்சி தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
இதுவரை 140 மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்றுள்ள தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன், தற்போது லண்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டி ஒன்றில் மருத்துவரான அவரது மூத்த மகன் இளஞ்செழியனுடன் இணைந்து கலந்து கொண்டார்.
கடந்த ஒரு வார காலம் லண்டனில் உள்ள என் மகன் குடும்பத்துடன் என் துணைவியாருடன் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தேன்.'இளைஞர் தம் உடற்பயிற்சிக்கான விழிப்புணர்வை'ஏற்படுத்தும் முயற்சியாக நமது 141 வது 21.1 கிமீ தூரத்திற்கான THE LEXICON BRACKNELL HALF MARATHON - 2023ல் என் மகன் மருத்துவர்… pic.twitter.com/7iwMeXdQPC
— Subramanian.Ma (@Subramanian_ma) May 15, 2023
இது அவருக்கு 141வது மாரத்தான் போட்டியாகும், இதில் 21.1 கிமீ தூரம் வரை ஓடி தமிழக அமைச்சர் மா. சுப்பிரமணியன் அசத்தினார்.
மா.சுப்பிரமணியன் வெளியிட்ட வீடியோ
இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவில், லண்டனில் உள்ள குடும்பத்தினர்களுடன் கடந்த ஒரு வாரமாக இருந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
உடற்பயிற்சி தொடர்பாக இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, லண்டனில் நடைபெற்ற 21.1 கி மீ தூரத்திற்கான The Lexicon Bracknell half Marathon-2023ல் எனது மகன் இளஞ்செழியனுடன் இணைந்து ஓடி நிறைவு செய்ததில் கூடுதல் மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார்.