முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு - திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது
முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனிதா ராதாகிருஷ்ணன் கைது
திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமானவர் அனிதா ராதாகிருஷ்ணன்.
கடந்த ஜூன் 20, 2026 அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில், முதல்வர் விஜய் குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், அவதூறாகவும் பேசியதாக, தவெக நகரச் செயலாளர் செல்வம், ஆத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், ஆத்தூர் காவல்துறையினர் திமுக எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
"ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளால் பொதுமக்கள் அடைந்துள்ள அதிருப்தி குறித்து பிரதான எதிர்க்கட்சி என்ற முறையில் விமர்சித்து பேசினேன். அரசியல் உள்நோக்கத்துடன் போலீசார் என் மீது இந்த வழக்கை பதிவு செய்துள்ளனர் எனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டுமென அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
7வது முறையாக எம்.எல்.ஏவாக இருக்கும் ஒரு அரசியல்வாதி இப்படி பேசுவதை ஏற்க முடியாது எனக்கூறிய நீதிபதி இளந்திரையன் அனிதா ராதாகிருஷ்ணனின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |