எங்க மாமனார் என்னம்மா பண்ணாரு? ஏதாவது வேணும்னா அக்கா கிட்ட கேட்ருக்கலாம்: திமுக MLA மருமகள் விளக்கம்
திமுக எம்.எல்.ஏ கருணாநிதி மகனின் வீட்டில் வேலை பார்த்த இளம்பெண் தாக்கபட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், அவரது மனைவி ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரம்
தமிழகத்தில் பல்லாவரம் எம்.எல்.ஏவாக இருப்பவர் கருணாநிதி. இவருடைய மகன் ஆண்ட்ரோ வீட்டுக்கு சில மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இந்த பெண்ணை ஆண்ட்ரோவும், அவரது மனைவி மெர்லினாவும் சேர்ந்து கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கவனத்துக்கு செல்லவே அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பின்னர், தமிழ்நாடு முழுவதும் இந்த செய்தி பரவிய நிலையில், தாக்கப்பட்டதாக கூறிய இளம்பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வெளியில் கூறினார்.
அப்போது அந்த பெண், "அவர்கள் கொடூரமாக தாக்கியதாகவும், சிகரெட்டால் சூடு வைத்ததாகவும், மிளகாய் தூள் கலந்த தண்ணீரை குடிக்க செய்ததாகவும்" குற்றம் சாட்டினார். பின்னர், திமுக எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
ஆடியோ வெளியிட்ட மெர்லின்
இந்நிலையில், திமுக எம்.எல்.ஏ மருமகள் ஆடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர், "உனக்கு அக்காவை பத்தி நல்லா தெரியும். உன்ன நான் கஷ்டப்படுத்தனும்னு நெனைச்சது இல்ல. உன் கையால் எழுதி வைத்த லெட்டரை இப்ப தான் நான் பார்த்தேன். இவ்ளோ லவ், இவ்ளோ அஃபெக்சன் என் மீது வெச்சிருக்குற நீ எதுக்காக இதையெல்லாம் செய்ற.
ஏதாவது வேணும்னா அக்கா கிட்ட கேட்ருக்கலாம். அத விட்டுட்டு ஒரு குடும்பத்தை டேமேஜ் பண்ணிட்டு இருக்க. இதோட சீரியஸ்னெஸ் தெரியாம நீ இருக்க. என்ன பத்தி பேசுற, அண்ணன பத்தி பேசுற. அது பரவாயில்ல.
ஆனா எங்க மாமனார் (எம்எல்ஏ இ. கருணாநிதி) என்னமா பண்ணாரு? எத்தனை வருடம் உழைப்பு தெரியுமா? நைட்டு பகல் பார்க்காமல் உழைச்சு இந்த பதவிக்கு வந்துருக்காரு. பொது வாழ்க்கைல இருக்கிறவர் பத்தி பேசக்கூடாதுமா" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |