சட்டமன்றத்தை பூட்டும்போது எலும்பு இருக்காது - முதல்வருக்கு மிரட்டல் விடுத்த திமுக எம்.எல்.ஏ கைது
முதல்வர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திமுக எம்.எல்.ஏமார்க்கண்டேயன் பேச்சு
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது.
இதில் பேசிய விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார்.
இதில் பேசிய அவர், "மானங்கெட்ட தமிழ்நாட்டின் முதலமைச்சர், உன்னை சட்டமன்றத்திற்குள் வைத்துப் பார்த்துக் கொள்கிறோம். நாங்கள் என்ன கோமாளி பயல்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாயா?

சட்டமன்றத்தை பூட்டும் போது உனக்கு எலும்பு இருக்காது, உடைத்துவிட்டுதான் அனுப்பி விடுவோம், சட்டமன்றத்தை பூட்டிப் பார். யார் ஓடியது? கைது செய்து விடுவார்கள் என்று இரவோடு இரவாக கரூரில் இருந்து கேராவனில் யாரை வைத்துக்கொண்டு நீ ஓடினாய்? நாங்க ஒன்னும் பயந்து ஓடவில்லை.
வட இந்தியாவில் வைரலாகும் முதல்வர் விஜய் குறித்த போலி செய்திகள் - தேசிய அளவில் முன்னிறுத்தப்படுகிறாரா?
தமிழ்நாட்டின் முதலமைச்சர் பேய் அடிச்சது போல சட்டமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். கொத்து புரோட்டா போட போறாராம், உன்னை போல ஆயிரக்கணக்கான பரோட்டா கடைகளை நாங்க பார்த்திருக்கிறோம்.
தவெக தலைவர் விஜய் அவர்கள் குறித்து பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் அவர்களின் முழுப்பேச்சு ! pic.twitter.com/wmAvDyGPEw
— Duraimurugan (@Saattaidurai) July 20, 2026
ஊழலின் மொத்த உருவம் தமிழகத்தின் முதல்வர். நூறு ரூபாய் டிக்கெட்டை ஆயிரம் ரூபாய்க்கு விக்கிறாங்க. 150 கோடி ரூபாய் கருப்பு பணம் வாங்கி இருக்காங்க.
வழக்கு போடுவேன், மிரட்டுவேன் எம்எல்ஏவிடம் விலைபேசுவேன் என்கிறான். மானங்கெட்ட பையன், தகுதி இல்லாதவன் தான் இவன் கட்சில இருக்கான். எங்கள் தலைவர்களை அவமரியாதை படுத்தினால் அடித்து விரட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். எந்த இடத்தில் என்ன பேசினாலும் அடிப்போம்." என பேசியுள்ளார்.
கைது
மார்க்கண்டேயனின் இந்த பேச்சு குறித்து தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் தவெகவினர் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனை இன்று காலை அவரது வீட்டில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரின் வீட்டின் முன்பு திரண்ட திமுகவினர் காவல்துறையினரின் வாகனத்தை மறித்து அமர்ந்து கோஷமிட்டனர்.
கனிமொழி கண்டனம்
திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனின் கைதுக்கு திமுக எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திமுக எம்.பி கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், "விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு. @mlavilathikulam அவர்களை அராஜகமான முறையில் கைது செய்திருக்கும் தவெக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கதக்கது.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) July 20, 2026
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க…
விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் தொடர்ந்து திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசுக்கு ஜனநாயக வழியில் தக்க பாடம் புகட்டப்படும். உடனடியாக, மார்கண்டேயன் அவர்களை விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |