சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
சட்டமன்றத்திலிருந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றம்
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று காவல்துறை மானியக்கோரிக்கையில் பதிலுரை வழங்கிய முதல்வர் விஜய், வீராணம் திட்டத்திற்கு கருணாநிதியின் மருமகன் மாறன் லஞ்சம் வாங்கியதாக சர்க்காரியா கமிஷன் அறிக்கையில் உள்ளதாக பேசினார்.

முதல்வர் விஜய்யின் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டுமென இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
முதல்வரின் பேச்சை அவைகுறிப்பிலிருந்து நீக்க முடியாது என சபாநாயர் தெரிவித்தார். இதனையடுத்து, சபாநாயகரை சுற்றி நின்று கொண்டும், அவரது இருக்கைக்கு முன்பும் அமர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து அமளியில் ஈடுபட்ட திமுக எம்.எல்.ஏ.க்களை அவையிலிருந்து வெளியேற்றுமாறு அவைக்காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

சபாநாயகரின் உத்தரவையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்களை அவை காவலர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |