பெண் அதிகாரி புகார்.., திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
DMK MLA Vasantham Karthikeyan Faces Complaint- கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், பெண்களைத் துன்புறுத்தும் நோக்கில் செயல்படுவது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு சர்ச்சைக்குரிய குறுஞ்செய்தி அனுப்பி தொந்தரவு செய்ததாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை ஐஜி கண்காணிப்பில், எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் அர்லேகரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ராஜ்மோகனிடம் வசந்தம் கார்த்திகேயன் மீதான புகார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "வசந்தம் கார்த்திகேயன் மீது பெண் அதிகாரி ஒருவர் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. அவர் மீது திமுக என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?" எனக் கேள்வி எழுப்பினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |