தூத்துக்குடியில் நள்ளிரவில் வீடு புகுந்து பெண் கொலை.., தவெக அரசுக்கு கனிமொழி கேள்வி
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள முதலூரைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (50). இவரது மனைவி மேரி ரெஜிலா (39).
இவர்களுக்கு பிளெஸ்ஸி (15), பிரின்ஸா பாப்பா (14), பிளெசெட் ராஜா (10) என மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவில் ஆயுதங்களுடன் புகுந்த மர்ம கும்பல் சரமாரியாகத் தாக்கியது.
இதில் மேரி ரெஜிலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் முத்துகிருஷ்ணன் மற்றும் மகன் பிளெசெட் ராஜா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
மேலும், இரண்டு மகள்களையும் அந்தக் கும்பல் கடத்திச் சென்றதாகக் கூறப்பட்டது. இதுகுறித்து தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே, கடத்தப்பட்ட சிறுமிகள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முத்துகிருஷ்ணனும் உயிரிழந்தார்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.''
இந்நிலையில், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும், பொது வெளியிலும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், பொறுப்பற்ற தவெக அரசு தமிழ்நாட்டை இத்தகைய நிலைக்குத் தள்ளியுள்ளதாகவும் திமுக எம்பி கனிமொழி விமர்சித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர்.
பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு.
சாத்தான்குளம் அருகே வீடு புகுந்து மேரி விஜீலா என்கிறப் பெண் வெட்டிப் படுகொலைச் செய்யப்பட்டு, அவரின் இரண்டு பெண் குழந்தைகளும் கடத்தப்பட்டுள்ளனர். அவரின் கணவரும் மகனும் படுகாயமடைந்துள்ளனர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் வீட்டிலும் பாதுகாப்பில்லை, பொது வெளியிலும் பாதுகாப்பில்லை எனும் அளவிற்கு ஓர் அசாதாரணச் சூழலுக்குள் தமிழ்நாட்டைத் தள்ளியிருக்கிறது பொறுப்பற்ற தவெக அரசு. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை? தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) October 23, 2026
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அன்றாடச் செய்தியாகிக் கொண்டிருக்கும் போது, அவற்றைத் தடுக்காமல் என்ன செய்துகொண்டிருக்கிறது ரீல்ஸ் அரசின் சினிமாத்தனமான அதிரடிப்படை?
தங்களுக்கு வாக்களித்த பெண்களின் பாதுகாப்புக்கு வேட்டு வைப்பதுதான் தவெக அரசு அவர்களுக்குத் தரும் பரிசா?
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |