நாம் தமிழர் கட்சி நிர்வாகியை சரமாரியாக தாக்கிய திமுக-வினர்! மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு
வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகியை திமுக-வினர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் எதிர்வரும் பிப்ரவரி 19ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் இன்று மனுதாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பிரச்னையில், திமுகவினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகியை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, வேட்புமனுத் தாக்கல் செய்ய மற்ற கட்சியினர் 3 பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையில், திமுவினர் மட்டும் 3 பேருக்கு மேல் கூட்டமாக சென்ற வேட்புமனுத் தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வேலூரில் மனுதாக்கல் செய்ய சென்ற #நாம்தமிழர்கட்சி-யின் வேட்பாளரை,#திமுக-வினர் தாக்கினர்??@NaamTamilarOrg @packiarajan@ITwingNTK @idumbaikarthi#ரௌடி_திமுக #Rowdy_DMK pic.twitter.com/PuBs4Wi0ZE
— வாணியம்பாடி-Vaniyambadiᴺᵀᴷ (@NtkVaniyambadi) February 4, 2022
இதை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் சங்கர், அங்கிருந்த பொலிசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக-வினர், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் சங்கர் லேசான காயமடைந்துள்ளார்.
சிறிது நேரத்தில் பொலிசார தலையிட்டு திமுக-வினரை அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
வேலூரில் மனுதாக்கல் செய்ய சென்ற #நாம்தமிழர்கட்சி-யின் வேட்பாளரை,#திமுக-வினர் தாக்கினர்??@NaamTamilarOrg @packiarajan@ITwingNTK @idumbaikarthi#ரௌடி_திமுக #Rowdy_DMK pic.twitter.com/ZO6afu4Dbl
— வாணியம்பாடி-Vaniyambadiᴺᵀᴷ (@NtkVaniyambadi) February 4, 2022