விஜய் பங்கேற்ற விழாவிற்கு திருமாவளவன் செல்லக்கூடாது.., திமுக அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

Vijay Thol. Thirumavalavan DMK
By Sathya Dec 14, 2024 05:20 AM GMT
Report

 தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பங்கேற்ற விழாவில் தொல் திருமாவளவன் பங்கேற்க கூடாது என்று திமுக அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியுள்ளார்.

விழாவில் பங்கேற்காத திருமா

சென்னை நந்தம்பாக்கத்தில் கடந்த 6 -ம் திகதி அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய விஜய், "மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாத, மக்களுக்கு அடிப்படை சமூகநீதியான பாதுகாப்பை கூட உறுதி செய்ய இயலாத கூட்டணியை நம்பியிருக்கும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். உங்களுடைய கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026 ம் ஆண்டில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்.

இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன்.., காலையில் விடுவிப்பு

இரவு முழுவதும் சிறையில் இருந்த நடிகர் அல்லு அர்ஜுன்.., காலையில் விடுவிப்பு

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவிற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவனால் வர இயலவில்லை. அவர் வர முடியாத அளவிற்கு கூட்டணி கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க மமுடிகிறது. ஆனால், அவருடைய மனம் இப்போது நம்மிடம் தான் இருக்கும்" என்றார்.

விஜயின் கருத்துக்கு பதிலளித்த திருமாவளவன், "அழுத்தம் கொடுத்தால் பணியும் அளவுக்கு நான் பலவீனமாக இல்லை" என்று கூறியிருந்தார்.

விஜய் பங்கேற்ற விழாவிற்கு திருமாவளவன் செல்லக்கூடாது.., திமுக அழுத்தம் கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு | Dmk Pressure Thiruma Not Attend Vijay Function Aad

அதேபோல விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, "தமிழ்நாட்டில் மக்களாட்சி தான் நடக்கிறது. மக்களால் தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகியுள்ளார்" என்றார்.

இதையடுத்து, கட்சியில் இருந்து ஆறு மாதத்திற்கு ஆதவ் அர்ஜுனா சஸ்பெண்ட் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

திமுக அழுத்தம்

இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த ஆதவ் அர்ஜுனா, "விஜய் பங்கேற்ற புத்தக விழாவில் பங்கேற்கக் கூடாது என திருமாவளவனுக்கு திமுக அழுத்தம் கொடுத்தது.

திருவண்ணாமலையில் தமிழக அமைச்சர் எ.வ. வேலுவை சந்திக்கும்போது விஜய் விழாவில் பங்கேற்க வேண்டாம் என்று கூறினார். அவ்வாறு பங்கேற்றால் கூட்டணியில் பிரச்னையாகிவிடும் என்றார். திமுகவின் அணுகுமுறை ஜனநாயகத்திற்கு எதிரானது. முதிர்ச்சியற்றது" என்று கூறியுள்ளார். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US