உதயநிதி ஸ்டாலின் கைது - தஞ்சாவூர் கொண்டு செல்லும் போலீஸ்
எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கைது
காவேரி விவகாரம் தொடர்பாக தவெக அரசை கண்டித்து தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

இதில், அவர் இரட்டை அர்த்தில் பேசியதாக அவர் மீது தஞ்சாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, இன்று நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.
காவல்துறையினர் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூர் கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கைது நடவடிக்கை குறித்து பேசிய உதயநிதி ஸ்டாலின், "நான் பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி Cut Copy Paste செய்து பொய் செய்தியை பரப்பியுள்ளனர்.
அதற்காக பொய் வழக்கு போட்டு கைது செய்திருக்கின்றனர். இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேன். சட்டரீதியாக சந்திப்பேன். இந்த கைது நடவடிக்கையை காமெடியாக பார்க்கிறேன்" என பேசியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், வீட்டின் முன்பு கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |