20 ஆண்டுகளுக்கு முன்னர் 16 வயது சிறுமியை சீரழித்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்ட நபர்! காட்டி கொடுத்த DNA
அமெரிக்காவில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய பாலியல் தாக்குதல் வழக்கில் நபர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜான் கார்டர் என்ற 51 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளவர் ஆவார்.
கடந்த 2000ஆம் ஆண்டு 16 வயது சிறுமி ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் குற்றவாளி பொலிசில் அப்போது சிக்காமல் தப்பியோடிவிட்டான். இந்த நிலையில் வேறு ஒரு வழக்கில் கைதான ஜானின் டிஎன்ஏ-வை பரிசோதனை செய்த போது 2000ஆம் ஆண்டு வழக்கிலும் அவர் தான் சம்மந்தப்பட்டிருக்கிறார் என தெரியவந்தது.
இதையடுத்து ஜானை பொலிசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.