ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்த மோதிரத்தை கொண்டு வந்தது யார் தெரியுமா?
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் நிச்சயதார்த்த மோதிரத்தை கொண்டு வந்த நபரின் தகவல்கள் வைரலாகி வருகிறது.
ஆனந்த் அம்பானி திருமணம்
Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கு 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது.
இவர்கள் நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது மோதிரத்தை கொண்டு வரும் நபரை ஈஷா அம்பானி அறிமுகப்படுத்துகிறார். பின்னர், அவர்களது வளர்ப்பு நாய் மோதிரத்தை கொண்டு ஓடி வருகிறது.
பின்னர், நாய் மேடைக்கு வந்ததும் துணியில் இருந்த மோதிரத்தை எடுத்து ஆனந்த் அம்பானி ராதிகாவின் விரலில் போட்டு விடுகிறார். இதனையடுத்து, அவர்களது குடும்பத்தினர் நடனமாடுகின்றனர்.
என்ன காரணம்
இந்நிலையில் தான் ஆனந்த் அம்பானி ஒரு விலங்குகள் நல ஆர்வலர் என்பது தெரியவந்துள்ளது. அவர் அளித்த ஒரு பேட்டியில், "சிறுவயதில் இருந்தே எங்களது அம்மா, அப்பா காடுகளுக்கு தான் அழைத்துச் செல்வார்கள். அழியக்கூடிய தருவாயில் இருந்த 60 வகையான உயிரினங்களை மீட்டு எங்கள் மறுவாழ்வு மையம் பரமாரிக்கின்றது" என்றார்.
இந்திய மாநிலமான குஜராத்தில் உள்ள ஜாம்நகரில் , ரிலையன்ஸ் குழுமத்தின் சார்பில் சுமார் 2500 ஏக்கர் நிலத்தில் யானை உள்ளிட்ட வன விலங்குகளை பராமரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆனந்த் அம்பானியின் முன்னெடுப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |