மிகவும் ஆபத்தானவர்... பொதுமக்கள் நெருங்க வேண்டாம்: நபர் தொடர்பில் எச்சரித்த லண்டன் பொலிசார்
லண்டனில் கொலை குற்றவாளி ஒருவர் பொலிசாரிடம் சிக்காத நிலையில், அவர் மிகவும் ஆபத்தானவர், பொதுமக்கள் எவரும் அவரை அணுக வேண்டான் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
மரணத்தை ஏற்படுத்திய வழக்கு
லண்டனின் Hackney பகுதியை சேர்ந்த 56 வயது ஜெரால்ட் கோட்டர் என்பவர் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி, மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் சிறையில் இருந்துள்ளார்.
Image: Met Police
2016 நவம்பர் மாதம் கிழக்கு லண்டனில் Leyton பகுதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தி, 23 வயது இளைஞரின் மரணத்திற்கு காரணமானார். இந்த நிலையில் கொலை உட்பட மேலும் பல குற்றங்களை ஒப்புக்கொண்ட அவர் மார்ச் 2017ல் சிறையில் அடைக்கப்பட்டார்.
நிபந்தனைகளை மீறியதாக
அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிபந்தனைகளை மீறியதாக கூறி பொலிசார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கோட்டரை நேரில் பார்க்க நேர்ந்தால் பொதுமக்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், அவரை நெருங்காமல் உடனடியாக 999 இலக்கத்திற்கு தொடர்புகொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |