இந்த கேள்வி கேட்காதீங்கன்னு ஆல்ரெடி சொல்லிருக்கேன்.., கோபமடைந்த நடிகர் ரஜினிகாந்த்
செய்தியாளர் கேட்ட கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் கோபமாக பதில் அளித்த சம்பவம் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்த் ஆவேசம்
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. அதோடு, தேசிய மகளிர் ஆணையமும் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளது.
இந்நிலையில் இன்று விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், "கூலி திரைப்படத்தின் பணிகள் 70 சதவீதம் நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளது” என்றார்.
மேலும் அவரிடம் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
உடனே அவர், "அரசியல் கேள்விகள் கேட்காதீங்கன்னு ஆல்ரெடி சொல்லிருக்கேன். தேங்க்யூ" என்று கோபமாக சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார். இதனிடையே, நடிகர் ரஜினிகாந்தை காண்பதற்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் கூடி கூச்சலிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |