மரணப்படுக்கையிலிருந்த மகாராணியாரைக் காண மனைவியை அழைத்துவரவேண்டாம் என வில்லியமிடம் கூறிய மன்னர்: காரணம் இதுதானாம்
மகாராணியார் இரண்டாம் எலிசபெத் மரணத்தருவாயிலிருக்கும்போது, அவரைக் காண விரைந்தவர்கள் இளவரசர்கள் வில்லியம், ஆண்ட்ரூ, எட்வர்ட் மற்றும் அவரது மனைவி சோபி முதலானவர்கள்தான்.
இளவரசர் ஹரி அவர்களுடன் வராமல் தனியாக ஒரு விமானத்தில் வந்தார். அவர் தன் மனைவி மேகனை அழைத்துவரக்கூடாது என கூறப்பட்டதாக செய்திகள் வெளியாகின.
புதிய தகவல்
இந்நிலையில், இளவரசர் வில்லியமும், மகாராணியாரைக் காண வரும்போது தன் மனைவியாகிய இளவரசி கேட்டை அழைத்துவரவேண்டாம் என மன்னர் கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ குடும்ப எழுத்தாளரான Robert Jobson என்பவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
Image: PA
காரணம் இதுதான்
அதாவது, அந்த நேரத்தில் ஏற்கனவே இளவரசர் ஹரி மகாராணியாரைக் காண வருவது குறித்து பிரச்சினை செய்துகொண்டிருந்தார். வந்தால் மேகனுடன்தான் வருவேன் என அவர் அடம்பிடிக்க, மகாராணியாரைக் காண பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும்தான் அனுமதி என மன்னர் சார்லஸ் கூறிவிட்டார்.
இந்நிலையில்தான், இளவரசர் வில்லியமிடம், மகாராணியாரைக் காண வரும்போது தன் மனைவியாகிய இளவரசி கேட்டை அழைத்துவரவேண்டாம் என மன்னர் கூறியதாக தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Robert Jobson.
Image: POOL/AFP via Getty Images
அதாவது, இளவரசி கேட் வரவில்லையானால், அதைக் காரணம் காட்டி, மேகனையும் வரவிடாமல் தடுப்பதுதான் திட்டம் என்கிறார் அவர். மன்னருக்கு மேகன் வருவதில் விருப்பம் இல்லை. ஆனால், அதை ஹரியிடம் சொல்லமுடியாததால், தனிப்பட்ட முறையில் கேட்டிடம் நீ வரவேண்டாம், அப்போதுதாம் மேகனை வரவேண்டாம் என சொல்வது நியாயமாக இருக்கும் என மன்னர் கூறியதாக தெரிவிக்கிறார் அவர்.
Image: AFP/Getty Images
எப்படியாவது மகாராணியாரை சந்திக்கவேண்டுமென்றிருந்த கேட், வேறு வழியில்லாமல் வீட்டிலேயே இருந்துவிட்டதாகவும், ஆனால், அதனால் அவருக்கு மேகன் மீது கசப்பு உருவானதாகவும் தெரிவிக்கிறார் Robert Jobson.