மொபைல் பயன்படுத்தும்போது இந்த 10 விடயங்களை செய்யாதீர்கள்!
நம் அன்றாட வாழ்க்கையில் பெரிய அங்கமாக இருக்கும் மொபைல் போனை சில நேரங்களில் நாம் பயன்படுத்தாமல் தான் இருக்க வேண்டும். அதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
தற்போதைய காலகட்டத்தில் நாம் அனைவரும் காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை ஸ்மார்ட் போன் இல்லாமல் இருப்பதில்லை. மொபைலை நாம் பயன்படுத்துவதை விட மொபைல் நம்மை பயன்படுத்துகிறது என்றே கூட சொல்லலாம்.
1. நீங்கள் காலையில் செல்லப்பிராணியுடன் நடைபயிற்சி சென்றால் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். செல்லப்பிராணிகளிடம் உங்களது நேரத்தை ஒதுக்குங்கள். அதனுடன், நீங்கள் சாலையில் நடந்தாலோ, விளையாடினாலோ போன் பயன்படுத்துவதை நிறுத்து விடுவது நல்லது.
2. முதலில் காலை எழுந்தவுடன் உங்களது துணையை பார்ப்பதற்கு பதில் மொபைல் போனை பார்ப்பதை நிறுத்த வேண்டும். இது பற்றி மருத்துவர்களும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள்.
3. நீங்கள் குடும்பமாக ஒன்றாக அமர்ந்து சாப்பிடும் போது மொபைல் போனை பயன்படுத்தாதீர்கள். ஒன்றாக அமர்ந்து ஜாலியாக பேசி சாப்பிடும் நேரத்தில் நீங்கள் மட்டும் மொபைல் போன் பார்ப்பது நன்றாக இருக்காது.
4.சாலையில் செல்லும் போது ஆள்கள் நடமாட்டம் குறைவாக இருந்தாலும், வாகனங்கள் குறைவாக சென்றாலும் மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்த்து விடுங்கள். மற்ற நபருடன் சாலையில் செல்லும் போதும் தவிர்த்தால் நல்லது.
5. நீங்கள் ஒருவரிடம் பேசும் போது அவர்களின் கண்ணை பார்த்து மட்டுமே பேசுங்கள். மாறாக மொபைல் போன் பயன்படுத்திக் கொண்டு பேசுவதை தவிர்த்து விடுங்கள். சில நேரங்களில் உங்களை அவர்கள் தவறாக பயன்படுத்துவதற்கு கூட வழிவகுக்கும்.
6. உங்கள் வீட்டில் நண்பர்களிடமோ, துணைவியிடமோ அமர்ந்து டிவி பார்க்கும் போது மொபைல் போன் பயன்படுத்துவதை தவிருங்கள்.
7.கழிவறைக்கு செல்லும் போது மொபைல் போன் பயன்படுத்துவதை தவிருங்கள். அது, மோசமான, சுகாதாரமற்ற செயலாகும். மேலும், நீங்கள் கழிவறையில் வைத்து போன் பேசினால் எதிரொலியை வைத்து நீங்கள் எங்கு வைத்து பேசுகிறீர்கள் என்று கண்டுபிடிக்க வைக்கும்.
8. இறுதிச்சடங்கின் போது மொபைல் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது, நீங்கள் அவர்களுக்கு செய்யும் அவமரியாதையாகும்.
9.பொது போக்குவரத்தான பேருந்து மற்றும் ரயில் பயணத்தின் போது உங்களது தனிப்பட்ட விவரத்தை பிறருக்கு தெரியும் படி பேசாதீர்கள். அது, அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
10. முக்கியமாக நீங்கள் உடலுறவில் இருக்கும் போது மொபைல் போனை ஆஃப் செய்துவிடுங்கள். வாழ்க்கையில் சில சந்தர்ப்பங்களில் நம் கவனத்தை சிதறாமல் பார்க்க வேண்டும். அதில் உடலுருவும் முக்கியமான ஒன்று.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |