தப்பி தவறி கூட இந்த பிரச்சினை இருப்பவர்கள் பீட்ரூட் சாப்பிடாதீங்க.. ஆபத்தை ஏற்படுத்துமாம்
Diabetes
Blood pressure
Kidney stones
By Kishanthini
பொதுவாக பீட்ரூட்டில் பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி6, வைட்டமின் பி9, வைட்டமின் சி, பீடைன் உள்ளிட்ட பல சத்துக்கள் நிறைந்துள்ளது.
குறிப்பாக இது ரத்த சோகை பிரச்சனை, இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கும்
இவ்வளவு நன்மைகள் நிறைந்த பீட்ரூட்டில் ஒரு சில பக்கவிளைவுகளும் உண்டு.
பீட்ரூட் சில பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதையும் நாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். குறிப்பிட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட சிலர் எக்காரணம் கொண்டும் பீட்ரூட்டை உணவில் சேர்த்து கொள்ளக் கூடாது. தற்போது அவர்கள் யார் யார் என பார்ப்போம்.
- குறைந்த ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் இவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது ரத்த அழுத்தத்தை இன்னும் குறைக்கிறது. எனவே குறைந்த ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் டயட்டில் இருந்து பீட்ரூட்டை விலக்கி வைக்க வேண்டும்.
- பித்தப்பை அல்லது சிறுநீரக கற்களால் பாதிக்கப்பட்டவர்கள் பீட்ரூட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பீட்ரூட்டில் ஆக்சலேட்டின் அளவு அதிகமாக இருப்பதால் சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகளில் காணப்படும் கற்கள் பிரச்சனையை அதிகரிக்க செய்யும்.
- அலர்ஜி அல்லது ஸ்கின் ரேஷ் பிரச்சனை இருந்தால் தங்கள் உணவில் பீட்ரூட் சேர்த்து கொள்வதை தவிர்க்க வேண்டும். அலர்ஜி உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது அலர்ஜி பிரச்சனையை அதிகப்படுத்தி விடும்.
- நீரிழிவு நோயாளிகள் பீட்ரூட் சாப்பிடுவது அவர்களது பிரச்சனையை அதிகரிக்க செய்யும். பீட்ரூட்டில் அதிக கிளைசெமிக் இன்டெக்ஸ் உள்ளதால் இதை சாப்பிடுபவர்களின் உடலில் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US