தப்பித் தவறிக்கூட வெறும் வயிற்றில் இந்த உணவுகளை எடுத்துக்காதீங்க
பசி எடுக்கிறது என்பதற்காக எந்த நேரத்திலும் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்றில்லை. சில உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். எந்தெந்த உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது என்று பார்ப்போம்.
தயிர் - தயிரில் லாக்டிக் அமிலம் இருப்பதால் வெறும் வயிற்றில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். தயிரில் உள்ள பக்டீரியாக்களானது, வயிற்றிலுள்ள அமிலங்களுக்கு இடையூறு விளைவிக்கும். அதனால் வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
வாழைப்பழம் - வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதுமட்டுமின்றி வாழைப்பழம் குடல் ஆரோக்கியத்துக்கு நலம் சேர்க்கும். இருப்பினும் வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரத்தத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அளவுகளில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும். இது தேவையற்ற பிரச்சினைகளுக்கு வழிவகை செய்யும்.
தக்காளி - இதிலிஐக்கும் டானிக் என்ற அமிலம் இரைப்பை அமிலத்துடன் வினைபுரிவதால், வயிற்றில் அசௌகரியம், எரிச்சல் என்பன உண்டாகும். அதனால் வெறும் வயிற்றில் தக்காளியை உண்பதை தவிர்க்க வேண்டும்.
கோப்பி - வெறும் வயிற்றில் கோப்பி குடிப்பதால் உடலில் அமிலத்தன்மையின் அளவு அதிகரிக்கிறது. அதுமாத்திரமின்றி நெஞ்செரிச்சல், அஜீரணம் போன்ற பிரச்சினையும் ஏற்படுகின்றது.