நீங்கள் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுபவரா? உஷாரா இருங்க.. இந்த ஆபத்துகளை எல்லாம் சந்திக்ககூடுமாம்
மயோனைஸ்(Mayonnaise) என்பது கொழுப்புச்சத்து நிறைந்த ஓர் உணவுப் பண்டம்.
இது முட்டை வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு, எண்ணெய், சர்க்கரை, உப்பு போன்ற மூலப்பொருட்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
கிபி. 17-ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மெனோர்கா தீவில் இது உருவானது. பிரான்ஸ், அமெரிக்கா நாடுகளில் பிரபலமாகி தற்போது உலகமெங்கும் அதிகமான ரசிகர்களை பெற்றுவிட்டது.
சான்விச், பர்கர், கிரில் சிக்கன் என அனைத்து உணவுகளின் சுவைக்காக பலரும் மயோனைஸை சேர்த்து சாப்பிடுகின்றனர்.
இருப்பினும் இதனை அளவாக எடுத்து கொள்வதே நல்லது. ஏனெனில் இந்த மயோனைசில் பாக்டீரியாக்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இதனை அதிகமாக எடுத்து கொள்ளும்போது உடலுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. அந்தவகையில் அடிக்கடி மயோனைஸ் சாப்பிடுவதால் எந்த பிரச்சனைகள் வரும் என்று பார்க்கலாம்.
- மயோனைஸை தயாரித்து சரியாக சேமித்து ஃபிரிட்ஜில் பராமரிக்காமல் இருந்தால் ஒரே நாளில் கெட்ட கிருமிகள் இனப்பெருக்கம் செய்துவிடும். ஆகவே இது உடலுக்கு ஆபத்தானது.
- கடைகளில் விற்கப்படும் மயோனைஸில் பதப்படுத்த தேவையான மூலக்கூறுகள் சேர்க்கப்படுகின்றன. அவ்வாறு சேர்க்கப்படும் மூலக்கூறுகள் சிலருக்கு உடலில் பலவிதமான பிரச்னைகளை ஏற்படுத்தும்.
- மயோனைஸை அதிக அளவில் சாப்பிடும் போது புற்றுநோய், இதய நோய், கல்லீரல் கோளாறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும்.
-
மயோனைஸில் சேர்க்கப்படும் எண்ணெய் அதிக கொழுப்பு நிறைந்தது. அதாவது ஒரு ஸ்பூன் மயோனைஸ் 94 கலோரிகளைக் கொண்டதாம். எனவே இது உடலில் கலோரி அளவை அதிகரித்து உடல் எடையை அதிகரிக்கும். ஆகவே இது ஆபத்தானது.