மாணவிகளின் உடலை கவனிக்காதீர்கள்: குரல் எழுப்பும் கனேடிய பள்ளி ஒன்றின் மாணவிகள்
மாணவிகளின் உடல் தங்கள் கவனத்தை திசை திருப்புவதாகவும், ஆண் அலுவலர்களை அசௌகரியமாக உணர வைப்பதாகவும் கனேடிய பள்ளி ஒன்றின் அலுவலர்கள் கூறுவதாக, அந்த பள்ளியில் பயிலும் மாணவிகள் தெரிவித்துள்ளார்கள்.
Saskatchewanஇலுள்ள Rossignol High school என்ற பள்ளியில் பயிலும் மாணவியான Kadence Hodgson (17), பள்ளி அலுவர்கள், மாணவிகளின் உடை விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், அப்படி நடவடிக்கைகள் எடுப்பது போன்ற விடயங்கள் மாற்றப்படவேண்டுமென்றும் குரல் கொடுத்து வருகிறார்.
பள்ளிக்கு வரும் மாணவிகள் முறையாக உடை அணியவில்லை என்று கூறி, பள்ளி நிர்வாகம் மாணவிகள் பலரை வீட்டுக்கு அனுப்பியது. அப்படி அனுப்பப்பட்டவர்களில் Kadenceம் ஒருவர்.
உடல் தெரியும் வகையில் எந்த உடையையும் அணியக்கூடாது என்றும், அப்படி அணிவது, ஆண் ஆசிரியர்களின் கவனத்தை திசை திருப்புவதாகவும், ஆண் அலுவலர்களை அசௌகரியமாக உணர வைப்பதாகவும் உள்ளதாக பள்ளி அலுவலர்கள் கூறுவதாக தெரிவிக்கிறார் Kadence.
அப்படி அவர்கள் கூறுவது. தன்னை அசௌகரியமாக உணர வைப்பதாக கூறும் Kadence, அவர்கள் தன்னை ஒரு பொருளாக பார்ப்பதாகவும், அது தனக்கு பிடிக்கவில்லை என்றும் அவர் கூறுகிறார்.
ஆண் அலுவலர்கள் சிலர், தங்களை மதுபான விடுதிக்கு செல்பவர்கள் போல இருப்பதாகவும், அவர்களது மார்பகங்களும் உடலும் தங்கள் கவனத்தை திசை திருப்புவதாக உள்ளது என்றும் விமர்சித்ததாக அவர் கூறுகிறார்.
தண்டிக்கப்பட்ட மற்றொரு மாணவியோ, அப்படி எங்கள் உடலும் உடையும் எங்கள் பள்ளியிலுள்ள ஆண் ஆசிரியர்களின் கவனத்தை திசை திருப்பும் என்றால், அவர்கள் கல்வி கற்பிக்கவே கூடாது என்கிறார்.
(எப்படிப்பட்ட உடைகளை அணிந்ததற்காக மாணவிகள் தண்டிக்கப்பட்டார்கள் என்பதைக் காட்டும் படங்களும் வெளியாகியுள்ளன. ஆசிரியர்கள் சொல்வது நியாயமா, மாணவிகள் சொல்வது நியாயமா என நீங்களே முடிவு செய்துகொள்ளலாம்).