இந்த உணவுகளை மறந்தும் கூட மீண்டும் சுட வைத்து சாப்பிடாதீர்கள்! மீறினால் ஏற்படும் விளைவுகள் இவை தான்
மீதமுள்ள உணவுகளை சுட வைத்து சாப்பிடும் பழக்கம் பலருக்கும் இருக்கும்.
எல்லா உணவுகளை அப்படி சாப்பிட முடியாது.
சில உணவுகளை மீண்டும் சுட வைக்கும் போது, அவை அதன் ஊட்டச்சத்துக்களை இழந்துவிடும். ஏன், அதில் சில வகை விஷமாக கூட மாறிவிடும்.
சிக்கன்
சிக்கனில் புரதச்சத்து அதிகமாக உள்ளது. இதை ஒரிரு நாள் கழித்து மீண்டும் சூடாக்கி சாப்பிட்டால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.
அரிசி சாதம்
வேகவைத்து சமைக்கபடாத அரிசிகளில் பேக்டீரியா இருக்கும், இதனால் புட் பாய்சனிங் ஏற்படும் என உணவு பல்கலைகழக ஆய்வானது கூறுகிறது.
அரிசியை சரியாக வேகவைத்து விட்டால் அதன் சிதல்கள் மூலம் அது சர்வைவ் ஆகிவிடும். இதை மீண்டும் சூடாக்கினால் வாந்தி, ஒவ்வாமை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
உருளைக்கிழங்கு
பூமிக்கடியில் விளையும் உருளைக்கிழங்கை மீண்டும் சூடு பண்ணி சாப்பிடுவதும் பிரச்சனை தான்.
அதுவும் நாம் அதை எப்படி, எங்கே வைக்கிறோம் என்பது தான் முக்கிய விடயமாகும். உருளைக்கிழங்கை வெளியில் வைக்காமல் பிரிட்ஜில் வைத்தால் உணவு ஒவ்வாமை தான் ஏற்படும்.
கீரை வகைகள்
நைட்ரேட் கீரைகளில் இருப்பதால் அதை மீண்டும் சூடாக்குவதால் அது நச்சு தன்மையடைய வாய்ப்புகள் உள்ளது. இந்த நச்சானது பின்னர் புற்று நோயை கூட அடைய வாய்ப்புள்ளது.
முட்டைகள்
வேக வைத்த முட்டைகளை மீண்டும் சூடாக்க கூடாது. இது வயிற்று பிரச்சனையையும் செரிமான கோளாறுகளையும் உண்டாக்கும்.