அரிசி இறால் முதலான உணவுப்பொருட்களை பயன்படுத்தவேண்டாம்: திருப்பிக் கொடுக்கக் கோரும் பிரெஞ்சு பல்பொருள் அங்காடிகள்
தங்களிடமிருந்து வாங்கப்பட்ட பாஸ்தா, அரிசி மற்றும் இறால் போன்ற சில உணவுப்பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என சில பிரெஞ்சு பல்பொருள் அங்காடிகள் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.
குறிப்பிட்ட உணவுப்பொருட்களை வாங்கியவர்கள் அவற்றை உண்ணவேண்டாம் என்றும், தாங்கள் வாங்கிய இடத்திலேயே அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட்டு அவற்றிற்கான தொகையை திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறும் அந்த அங்காடிகள் கேட்டுக்கொண்டுள்ளன.
Saint-Eloi நிறுவனத்தின் couscous aux épices என்ற தயாரிப்பு, அதன் குறியீட்டு எண் 3250391331444. காலாவதி திகதி 2022 ஜனவரி 14. Carrefour நிறுவனத் தயாரிப்பான பாஸ்மதி அரிசி, அதன் குறியீட்டு எண் 3560070837984.
காலாவதி திகதி 2023 பிப்ரவரி 5. Super U நிறுவனத்தின் பாஸ்தா, குறியீட்டு எண், 2021-04-0150, காலாவதி திகதி 2024 ஜனவரி 31, மற்றும் குறியீட்டு எண், 2021-04-0151, காலாவதி திகதி 2024 பிப்ரவரி 28. Casino நிறுவனத்தின் இறால், குறியீட்டு எண், 3222477634237, காலாவதி திகதி 2022 பிப்ரவரி 2.
இந்த இறாலில் பயங்கர வயிற்றுப் பிரச்சினையை உண்டாக்கக்கூடிய vibrio parahaemolyticus என்னும் பயங்கர நோய்க்கிருமி இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த உணவுப்பொருட்கள் அனைத்திலுமே ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதால், அவற்றை
திருப்பிக் கொடுக்குமாறு பல்பொருள் அங்காடிகள் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளன.