மறந்தும் கூட இந்த உணவுப் பொருட்களை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தாதீர்கள்!
இன்றைய காலகட்டத்தில் அநேகமாக நம் அனைவரது வீடுகளிலும் ஃப்ரிட்ஜ் எனப்படும் குளிர்சாதன பெட்டி பயன்பாட்டில் உள்ளது.
ஃப்ரிட்ஜில் உணவுப் பொருட்களை சேமித்து வைப்பதால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் பாதுகாக்கலாம்.
ஆனால் ஃப்ரிட்ஜில் சில உணவுப்பொருட்களை வைக்கக் கூடாது. அப்படி வைப்பதன் மூலம் சுவை மாறிப்போவது, பூசணம் பிடிப்பது ஆகியவை ஏற்படலாம்.
சில பொருட்களை வைப்பதனால், அதன் வாசனை மூலம் ஃப்ரிட்ஜில் இருக்கும் மற்ற பொருட்களின் தன்மையை கூட மாற்றக்கூடும்.
வைக்கக்கூடாத பொருட்கள்
பூண்டுகளை ஃப்ரிட்ஜில் வைப்பது கூடாது. உரித்த பூண்டுகளை வைப்பதால் வாடை வீசும் மற்றும் பூசணம் பிடிக்கும். பூசணம் பிடித்த பூண்டு புற்றுநோயை கூட கொண்டு வரலாம். ஆகையால் பூண்டை தோலுரிக்காமல் வாங்கி ஃப்ரிட்ஜில் வைக்காமல் பயன்படுத்துங்கள்.
சமையலுக்கு முன்பாக உரித்து கழுவி பயன்படுத்துவதே சிறந்த முறையாகும். வெங்காயத்தை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது. அதிலும் நறுக்கிய வெங்காயத்தை வைக்கவே கூடாது. அப்படி வைப்பதால் அதிலுள்ள ஸ்டார்ச்சானது சர்க்கரையாக மாற்றப்படும்.
ஆகையால் சமையலுக்கு முன்பாக வெங்காயத்தை உரித்து, நறுக்கி பயன்படுத்துவதே சிறந்தது.
எண்ணெய் வகைகளை ஃப்ரிட்ஜில் சேமிப்பது தவறான செயலாகும். எண்ணெயின் ஆயுளை அதிகரிக்க இருளான மற்றும் வெப்பநிலை குறைவான இடத்தில் வைத்து பயன்படுத்துங்கள்.
அரிசி சோறினை அதிகபட்சமாக 24 மணி நேரத்திற்கு மேலாக ஃப்ரிட்ஜில் சேமிப்பதை முற்றிலுமாக தவிருங்கள்.
மேலும் காபி, தேன், வாழைப்பழம் ஆகியவற்றை ஃப்ரிட்ஜில் சேமித்து வைத்து பயன்படுத்துவதை தவிர்க்கவும். இவற்றை புதிதாக சந்தையில் வாங்கி பயன்படுத்துவதே சிறந்ததாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |