கடன் பிரச்சனை கரைந்து போக உதவும் எளிய பரிகாரம்: இந்த நாளில் செய்யுங்கள்
கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலரை கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.
ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.
இப்படிப்பட்டவர்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்து வந்தாலே கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும்.
இந்த பரிகாரத்தை செவ்வாய் கிழமைகளில் காலை 6- 7மணிக்குள்ளும், அதேபோல மதியம் 1 - 2 மணிக்குள்ளும் செய்ய வேண்டும்.
கடன் பிரச்சனையை தீர்க்கும் பரிகாரம்
இந்த பரிகாரத்தை நீங்கள் மகாலட்சுமி படத்திற்கு முன்பு தான் செய்ய வேண்டும்.
முதலில் உள்ளங்கையில் கல் உப்பை எடுத்துக்கொண்டு மகாலட்சுமி படத்திற்கு முன்பு மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
பின்னர் அந்த கல் உப்பை ஒரு தட்டில் போட்டு விசாலமாக பரப்பவும். அந்தத் தட்டில் வைத்த கல் உப்பில் உங்கள் கடன் தொகை எவ்வளவோ அதனை ஆள்காட்டி விரலை பயன்படுத்தி எழுதவும்.
நீங்கள் எழுதி முடித்த பின்பு விரலி மஞ்சள் எடுத்து அதன் மேல் வைத்து விடுங்கள். அவ்வளவுதான் இந்த பரிகாரம் இதனை நீங்கள் லட்சுமி தேவியின் படத்திற்கு முன்பு 11 நாட்கள் வைக்க வேண்டும்.
அந்த 11 நாட்களும் நீங்கள் கடன் அடைக்க முயற்சிகளை எடுக்க வேண்டும். அந்த முயற்சிகள் கண்டிப்பாக இந்த பரிகாரத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படும்.
பின்னர் 11 நாட்கள் கழித்து அந்த விரலி மஞ்சள் எடுத்து உங்கள் பூஜை அறையில் வைத்துவிட்டு கல் உப்பை உங்கள் இரண்டு கைகளால் எடுத்து தண்ணீர் நிரப்பி அதில் கல் உப்பை கரைக்கவும்.
அப்பொழுது மனதார வேண்டிக் கொள்ளுங்கள். அந்த கல் உப்பு கரைவது போல உங்கள் கடனும் கரைந்து விடும்.
பெரிய கடன் தொகையாக இருக்கும் பட்சத்தில் இதனை தொடர்ந்து மூன்று முறை இந்த பரிகாரத்தை செய்யுங்கள் நிச்சயம் நல்ல வழி பிறக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |