துணியை வீட்டிற்குள் காயவைக்கின்றீர்களா? கவனம்!!
பெரும்பாலும் நம்மிள் சிலர்துணியை வீட்டின் உள்ளேயே காய வைக்கின்றார்கள்.
அப்படி செய்வதனால் எவ்வளவு ஆபத்து என்று தெரியுமா?
நகரத்தில் வாழ்பவர்களை பொருத்தவரையில் வீட்டிற்கு வெளியே இடம் இருப்பது குறைவு.
ஆகவே அங்குள்ளவர்கள் வீட்டின் உள்ளேயே காயவைப்பார்கள். அதனால் எவ்வளவு பிரச்சினை ஏற்படுகின்றது என்று பார்க்கலாம்...
கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளுக்கு பிடித்தது ஈரப்பதம்.
இந்த நுண்ணுயிர்கள் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை இழக்க செய்யும்.
அந்த நுண்ணுயிர்கள் காற்றின் மூலம் காயவைக்கும் துணிகளோடு ஒட்டிக்கொள்கின்றது.
இதன் மூலம் அந்த ஆடையை அணிபவர் ஊடாக ஒருவரின் உடம்பிற்குள் செல்கின்றது.
இதனால் சுவாசம் தொடர்பான பல நோய்கள் ஏற்படும்.
ஆகவே துணியை வீட்டின் வெளியில் வெயிலில் காயவைக்க வேண்டும் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.