சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு வருகிறதா? உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்கலாம்!
சாப்பிட்டவுடன் மலம் கழிக்க வேண்டும் என்று ஓர் உணர்வு சிலருக்கு வரலாம் இதற்கு ஆங்கிலத்தில் Irritable Bowl Syndrom (IBS) என பெயராகும்.
இந்த அவஸ்தையை எல்லோரும் வாழ்வில் ஒருநாளாவது அனுபவித்திருப்பர்.
IBS ஏன் வருகிறது?
இரைப்பை, பெருங்குடல் மற்றும் சிறுகுடல்களின் சீரான இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது தடங்கல்களால் இந்தப் பிரச்சினை வருகிறது.
செரிமானப் பாதைகளில் ஏற்படும் தொற்று, மூளைக்கும் செரிமான மண்டலத்துக்குமான தொடர்பில் குளறுபடி, மன அழுத்தம் மற்றும் மனப்பதற்றம் காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம்.
IBS அறிகுறிகள்
வயிற்று வலி, வயிற்று உப்புசம், உணவு உண்டவுடன் மலம் கழிக்க வேண்டும் எனும் உணர்வு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல்.
இது ஒரு தற்காலிகப் பிரச்சனைதான். ஆனால் இதுவே மாதக்கணக்கில் இருந்தால் அவசியம் மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
உணவில் கவனம்
உணவில் நார்ச்சத்து அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். காரசாரமான மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் ஜங்க் ஃபுட்ஸையும் தவிர்க்க வேண்டும். முழுதானியங்கள், காய்கறிகள், பழங்களை சேர்த்துக்கொண்டால் நலம் பெயர்க்கும்