உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா? அதனை எப்படி சரி செய்யலாம்?
Hair Loss
Hair tips
By Kishanthini
இன்றைய காலத்தில் பலரும் முடி உதிர்வு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகிறார்கள்.
தினசரி தலை சீவும் பொழுது முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சில நேரங்களில் எக்கச்சக்கமாக முடி கொட்டி, பெண்களுக்கு அடர்த்தி குறைந்து விடும்.
பெரும்பாலும் முடி உதிர்வதற்கு பல காரணங்கள் இருந்தாலும், அனைவராலும் சொல்லப்படுகிற ஒரு காரணமாக இருந்தாலும் தாய், தந்தை மரபு வழியிலும் முடி உதிர்தல் பிரச்னை தொடரும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுக்க ஒரு சில வழிகள் உள்ளது. தற்போது முடி அதிகமாக கொட்டுவதற்கு என்ன வழிகளை பின்பற்றலாம் என்பதை பார்ப்போம்.
- ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஒரு டேபிள் பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்
- வெங்காயச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.
- உருளைக்கிழங்கை சாறு எடுத்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்
- ப்ளாக் டீயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் முடியை அலச வேண்டும்.
இதனால் முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் நன்கு அடர்த்தியாக வளரும்.
- விளக்கெண்ணெயுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசினால், முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, தலைமுடி மெலிவது தடுக்கப்படும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US