உங்களுக்கு முடி ரொம்ப கொட்டுதா? ஷாம்பூக்கு பதிலாக இதை பயன்படுத்தி பாருங்க... அபரிமிதமாக நன்மைகள்!
பொதுவாக நாம் தலைக்கு பயன்படுத்தப்படும் ஷாம்பூவில் இருக்கும் ரசாயன கலவைகள் நம் தலை முடி பிரச்சனையை அதிகரிக்க செய்து கொண்டிருக்கிறதே தவிர, குறைக்க செய்வது இல்லை.
இன்றைக்கு பலர் தலைமுடி பிரச்சினையால் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள்.
செயற்கை முறையை கைவிட்டு விட்டு முற்றிலுமாக ஷாம்பூ போடுவதை நிறுத்தி விடுங்கள். அதற்கு பதிலாக இயற்கையான முறையில் இப்படி தலையை அலசினால் தலைமுடி உதிர்தல் பிரச்சனை வேகமாக குறைய தொடங்கும்.
தற்போது முடி வளர்ச்சியை அதிகரிக்க ஒரு சூப்பரான இயற்கை வழி ஒன்றை பார்ப்போம்.
image - timesofindia
தேவையானவை
- வெந்தயம் - டேபிள் ஸ்பூன்
- பச்சை பயறு - டேபிள் ஸ்பூன்
- சின்ன வெங்காயம் - நான்கு
- அரிசி கழுவிய தண்ணீர்
செய்முறை
- முதலில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதே மாதிரி ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு பச்சை பயறை எடுத்துக் கொள்ளுங்கள்.
- இரண்டையும் நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் ஊறிய பின்பு தண்ணீரை வடிகட்டி விடுங்கள். பின்னர் இதை உலர்ந்த காட்டன் துணியில் மூட்டை போல கட்டி ரப்பர் பேண்ட் போட்டுக் கொள்ளுங்கள்.
- ஒரு நாளில் இது முளைவிட ஆரம்பிக்கும். நன்கு முளைவிட்ட பிறகு அதை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் நான்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேருங்கள். அரைப்பதற்கு அரிசி கழுவிய தண்ணீரை பயன்படுத்துங்கள்.
- மிக்ஸியை இயக்கி நைசாக அரைத்து எடுத்த பின்பு, அதை தலை முழுவதும் வேரிலிருந்து நுனி வரை நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள்.
- அதன் பிறகு அலசினால் நுரைக்க ஆரம்பிக்கும். அந்த நுரையே உங்களுக்கு ஷாம்பூ போல செயல்படும். பிறகு தண்ணீர் ஊற்றி தலையை நன்கு அலசி வந்து விடுங்கள்.
- இது போல வாரம் ஒரு முறை செய்தால் உங்களுடைய முடி வளர்ச்சி அபரிமிதமாக நிச்சயம் இருக்கும்

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.