உங்களிடம் PF Account இருக்கிறதா? அப்போ நீங்கள் ரூ.50,000 இலவசமாக பெறலாம்
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் பி.எஃ.ப் கணக்கு (PF Account) வைத்திருப்பவர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.50000 இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.50,000 இலவசம்
இந்தியாவில் உள்ள ஊழியர்களின் நிதி எதிர்காலத்தை பாதுகாப்பதில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முக்கிய பங்கு வகிக்கிறது.
அந்தவகையில் ஊழியர்களுக்கு ஒரு நல்ல அறிவிப்பை வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ளது.
அதாவது, ஊழியர்களுக்கு நிபந்தனைக்கு உட்பட்டு ரூ.50000 இலவசமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் தங்களுக்குரிய ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்வதன் மூலம் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இது அவர்களுடைய முதுமையை சீராக கழிக்க உதவுகிறது.
இந்த பணத்தை பணியின் போதும் ஊழியர்கள் எடுத்துக் கொள்ளலாம். EPFO தொடர்பான விதிகளில் லாயல்டி-கம்-லைஃப் (Loyalty-come-life) ஒன்று.
இதன் மூலம் PF Account வைத்திருக்கும் ஊழியர்கள் ரூ.50,000 வரை இலவசமாக பெறலாம். குறிப்பாக, ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறும்போதும் அதே PF Account -ல் பங்களிக்க வேண்டும்.
இப்படி, தொடர்ந்து 20 ஆண்டுகளாக ஒரே PF Account -ல் பங்களித்த பிறகு தான் இந்த நன்மையை பெற முடியும். சமீபத்தில், EPFO கணக்குகளில் 20 வருடங்களாக தொடர்ந்து பங்களிக்கும் வாடிக்கையாளர்களுக்கு Loyalty-come-life நன்மையை அளிக்கும் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
அதாவது ஒரே PF Account -யை 20 ஆண்டுகளாக பயன்படுத்தி வருபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 கிடைக்கும். அதன்படி, அடிப்படை சம்பளம் ரூ.5000 உள்ளவர்கள் ரூ.30,000 -ம், ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்கள் ரூ.40,000 -ம், 10,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் ரூ.50,000 பெறுவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |