உங்களுக்கு நீண்ட நாளாக வாயுத்தொல்லை இருக்கா? இதனை தடுக்க இவற்றில் ஒன்றை செய்தாலே போதும்
Health
Food
Gatric
By Kishanthini
இன்றைய காலத்தில் பலரும் வாயுத்தொல்லையால் அவஸ்தைப்படுவதுண்டு.
அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருவது, வாயு பிரிதல், நெஞ்செரிச்சல், வயிற்று உப்பிசம் போன்ற பிரச்சனைகள் அனைத்தும் வாயு பிரச்சனை வருவதற்கான அறிகுறிகளாகும்.
இதற்கு நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிட்டும் பலன் என்னவோ தற்காலிகமாக தான் இருக்கும். ஆனால்இந்த வாயுத் தொல்லையைச் சரி செய்ய எளிமையான வழிகள் சில உள்ளன. தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
- சீமை சாமந்தி பூ பல வகைகளில் நம் உடலிற்கு ஆரோக்கியம் அளிக்கிறது. இதன் டீயை பருகுவதால் அஜீரணம், வயிற்று மந்த நிலை, தலைவலி, வயிற்றுப் புண், இரைப்பை அழற்சி போன்ற பிரச்சனைகள் சரியாகும்.
- வெந்தயம் நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்கிறது. மேலும் இதனுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று வலி குணமாகும்.
- சிறிதளவு பெருஞ்சீரகத்தை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட்டு பின் மிதமான சூட்டில் அந்த நீரை ஒரு டம்ளர் அருந்தினால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
- துளசி சாறு மற்றும் இஞ்சி சாறை தலா மூன்று ஸ்பூன் எடுத்துக்கொண்டு காலை மாலை என இரு வேலையும் மூன்று நாட்களுக்கு குடித்து வர வாயு தொல்லை நீங்கும்.
- 1 டேபிள் ஸ்பூன் சீரகத்தை 2 கப் தண்ணீரில் போட்டு 10-15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். இந்த தண்ணீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் வைத்து சாப்பிட்ட பிறகு குடித்து வருங்கள். வாயுத் தொல்லை விரைவில் நீங்கி விடும். சீரகத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
- இரைப்பை சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மற்றொரு சிறந்த மூலிகை கொத்தமல்லி இலைகளாகும். இதிலுள்ள டையூரிடிக் பண்புகள் வாயு மற்றும் வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
- புதினா எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு கலவைகள் உள்ளதால் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் உணர்வை போக்குகிறது. மேலும் இது வயிற்றுப் புழுக்களை அழிப்பதோடு வாயுத் தொல்லையையும் போக்க வல்லது.
- ஒரு ஸ்பூன் பெருங்காயத்தூளைச் சிறிது வெந்நீரில் கலந்து கொள்ளுங்கள். வாயுவைப் போக்கும் சிறந்த மருந்து பெருங்காயம். இது குடலில் அதிகமான பாக்டீரியாக்கள் உருவாகுவதைத் தடுத்து வாயுவை வெளியேற்றுகிறது.
- மிளகைப் பொடி செய்து 50 கிராம் எடுத்து, 2 டம்ளர் நீரில் சேர்த்து 20 நிமிடங்கள் நன்றாக காய்ச்சி, அந்த நீரை வடிகட்டி, கால் டம்ளர் அளவு என மூன்று வேளை அருந்தினால் வாயுத் தொல்லை குணமாகும்.
- சுக்கு கலந்த வெந்நீரை அடிக்கடி குடித்து வந்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
- காய்ந்த கறிவேப்பிலை, ஓமம், கசகசா, சுண்டைக்காய் வற்றல், மற்றும் சுக்கு இவற்றில் தேவையான அளவு சமமாக எடுத்து இவற்றை நெய்யுடன் வறுத்து பொடியாக்கி சாப்பிட்டால் வாயுத் தொல்லைக் குணமாகும்.
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US