உங்களுக்கு வைரஸ் காய்ச்சலா? கவலையை விடுங்க.. இந்த பானத்தை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் போதும்
- டெங்கு, சிக்குன் குன்யா, பன்றி காய்ச்சல், பறவை காய்ச்சல் எனப் புதுப்புது வைரஸ் காய்ச்சல் வகைகள் பெருகிவரும் காலம் இது.
அவற்றைக் கட்டுப்படுத்தும் வீரியமிக்க மருந்து பல நூற்றாண்டுகளாக இன்று வரை மக்கள் பயன்படுத்தி தான் வருகின்றார்கள்.
அதில் ஒன்றான வைரஸ் காய்ச்சல்களை தீர்க்க கூடிய ஒரு சூப்பரான கஷாயம் ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
தேவையான பொருள்
- கற்பூரவள்ளி இலை - 2
- சித்திரத்தை - 10 கிராம்
- மிளகு - 7
- தண்ணீர் - 200 மி.லி
- வெற்றிலை - 1
- துளசி - ஒரு கைப்புடி அளவு
- சுக்கு - சிறிதளவு
செய்முறை
முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். பிறகு சுக்கு,மிளகு மற்றும் சித்திரத்தை ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை,துளசி,வெற்றிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும். தண்ணீரை 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இந்த நீரை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி முற்றிலுமாக நீங்கும்.