முடி அதிகமா கொட்டுதா? இதனை தடுக்க என்ன செய்யலாம்?
hair tips
By Kishanthini
ஒவ்வொருவருக்கும் தலைமுடி என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தலை முடி தான் ஒருவரது அழகை நிர்ணயிக்கிறது. அத்தகைய தலை முடியை சரியாக பராமரிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
முன்பு எல்லாம் 40 வயதில் தான் முடிகொட்டும் பிரச்சனை வரும் , ஆனால் இப்போது 20,21 வயதிலே முடி கொட்டும் பிரச்சனை அனைவருக்கும் வருகிறது.
இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. மன அழுத்தம், ஹர்மோன்கள் பிரச்சினை, உணவுமுறைகள் போன்றவை முக்கியமானது ஆகும்.
இதனை தடுக்க அதிக பணத்தை செலவு செய்யவேண்டும் என்ற அவசியமானதாகும். அந்தவகையில் முடி கொட்டுவதை தவிர்க்க என்ன மாதிரியான எளிய வழிகளை கையாளலாம் என்பதை பார்ப்போம்.
- முட்டையை உடைத்து ஊற்றி, அத்துடன் ஒரு டேபிள் பூன் விளக்கெண்ணெய் மற்றும் ஒரு டேபிள் பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
-
வெங்காயச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் தயிர் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்தால், தலைமுடி அடர்த்தியாக வளர்வதோடு, முடியும் பட்டுப்போன்று இருக்கும்.
-
உருளைக்கிழங்கை சாறு எடுத்து, தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
- ஆளி விதையை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் அதை அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்போது ஜெல் போன்று வரும். அந்த ஜெல்லை சேகரித்து, தலைமுடியில் தடவி ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, முடி உதிர்வது குறைந்து, முடி அடர்த்தியாக வளரும்.
- ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை தலையில் தடவி மசாஜ் செய்து அரை மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசினால், முடியின் வளர்ச்சி தூண்டப்பட்டு, தலைமுடி மெலிவது தடுக்கப்படும்.
- கற்றாழையின் ஜெல்லை இரவு தூங்கும் முன் தலையில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வர, முடி நன்கு அடர்த்தியாக வளர்ச்சி பெறும்.
- விளக்கெண்ணெயுடன் இஞ்சி சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி அரை மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
- ப்ளாக் டீயுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி அரை மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் முடியை அலச வேண்டும். இதனால் முடி உதிர்வது நிற்பதோடு, முடியும் நன்கு அடர்த்தியாக வளரும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US