உங்களுக்கு பற்களில் மஞ்சள் கறை இருக்கா? இதனை சரிசெய்ய என்ன செய்யலாம்?
நம்மில் பலருக்கு பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதுண்டு.
பற்கள் வெண்மையாக இல்லாமல் மஞ்சள் கறை படிந்து காணப்படுவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றது.
அதில் மரபணுக்கள், காபி, டீ அருந்தும் பழக்கம், முறையான பற்கள் சுகாதாரமின்மை, புகைப்பிடித்தல், கார்பனேட்டட் பானங்கள் பொதுவான காரணமா காணப்படுகின்றது.
பலரும் பல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கறையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு.
சிலர் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில், நேராக பல் மருத்துவரிடம் சென்று செயற்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.
உண்மையில் இதனை வீட்டில் இருக்கும் பொருட்கள் கொண்டே சரி செய்ய முடியும் தற்போது அவற்றை பார்ப்போம்.
image - blyssdental
- 200 மில்லி தண்ணீரில் 2 ஸ்பூன் ஆப்பிள் சிடார் வினிகரைக் கலந்து அதை மௌத்வாஷாகப் பயன்படுத்தலாம். வாயில் சிறிது இந்த கலவையை ஊற்றி, வாயின் மூலை முடுக்குகளில் நுழையும்படி ஒரு நிமிடம் வரை வாய்க்குள் வைத்திருந்து, வாயைக் கொப்பளிக்கவும்.
- எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் வாழைப்பழம் போன்ற பழங்களின் தோல்களைப் பற்களின் மேல் வைத்துத் தேய்த்து வர பற்களின் மஞ்சள் நிறமும் பற்களில் உள்ள கறைகளும் கொஞ்சம் கொஞ்சமாக மறைவதைப் பார்க்கலாம்.
- தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்யும்போது பற்களின்மேல் பிளேக் படியாமலும் பற்களில் மஞ்சள் கறை படியாமலும் தடுக்கச் செய்கிறது.
- பேக்கிங் சோடாவை பற்களுக்கு பயன்படுத்தலாம். இது ஈறுகளைப் பாதுகாப்பதோடு பற்கள் மற்றும் வாய்ப் பகுதியில் இருக்கும் பாக்டீரியாக்களைத் தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது.
- தினமும் இரண்டு முறை கற்றாளை ஜெல்லை நன்கு கழுவியபின் பற்களில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வந்தால், பற்கள் வெண்மையாகும்.
- தினமும் கொய்யா இலையை வாயில் போட்டு சிறிது நேரம் மென்று, பின் அதனை துப்ப வேண்டும். இப்படி செய்து வந்தால், பற்களின் பின் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும்.
- சாம்பல், கரி, வேப்பங்குச்சி போன்றவற்றை கொண்டு பற்களை துலக்கினால் பற்களில் உள்ள மஞ்சள் கறை நீங்கும்.