கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா?
சமீபத்திய ஆய்வு ஒன்றில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது குறித்து மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
ஆய்வில் தெரியவந்த உண்மை
பெரும்பாலான கனேடியர்களுக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆண்டு வருமானம் எவ்வளவு என்பது தெரியாத விடயமாகவே உள்ளது.
இந்நிலையில், ஆய்வமைப்பு ஒன்று சமீபத்தில் மக்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி எழுப்பியது.
மக்கள் கணிப்பு
1,000 கனேடியர்களிடம் கனடா பிரதமரின் ஆண்டு வருமானம் எவ்வளவு இருக்கும் தெரியுமா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், 18 சதவிகிதம் பேர் மட்டுமே பிரதமரின் ஆண்டு வருமானம் 301,000 டொலருக்கும் 400,000 டொலருக்கும் இடையில் இருக்கும் என சரியாக கணித்துள்ளார்கள்.
42 சதவிகிதம் மக்கள், பிரதமரின் ஆண்டு வருவாய் 301,000 டொலர்கள் இருக்கும் என்றும், 24 சதவிகிதம் மக்கள், பிரதமர் 400,000 டொலருக்கும் அதிகமாக வருவாய் ஈட்டுவார் என்றும் நம்புவதாக தெரிவித்துள்ளார்கள்.
சரி, கனேடிய பிரதமரின் ஆண்டு வருவாய் எவ்வளவு?
இந்த ஆண்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் வருவாய் 379,000 டொலர்கள்!

THE CANADIAN PRESS/Justin Tang
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        