மழை எப்படி உருவாகின்றது தெரியுமா?
காற்று நீராவியால் நிரப்ப படும் போது மேகங்கள் உருவாகின்றன. குளிர்ந்த காற்றை விட வெப்பமான காற்று அதிக நீராவியைக் கொண்டிருக்கும்.
அந்த காற்று மென்மேலும் குளிர்விக்க படும் பொது அது நம் கண்ணுக்கு தெரியும் மேக கூட்டங்களாக தெரிகின்றன.
மேகத்தை உருவாக்கும் நீர் அல்லது பனித் துகள்கள் மேலும் அதிக குளிர்ச்சியான சூழ்நிலையில் பெரிய துகள்களாக வளரக்கூடும்,அதன் அடர்த்தி அதிகமாகி பூமியின் ஈர்ப்பு சக்தியால் கீழ் நோக்கி மழையாக பெய்கின்றன .
மழை மேகங்கள் இருட்டாக இருப்பதற்கான முக்கிய காரணம் அவற்றின் நீராவி அடர்த்தி காரணமாகும்.
சிறிய நீர் துளிகள் மற்றும் / அல்லது பனி படிகங்களிலிருந்து மேகங்கள் உருவாகும்போது, அவை அடர்த்தியாக இருப்பதால், சூரியனில் இருந்து வெளியேறும் அதிக ஒளி சிதறடிக்கப்பட்டு அவற்றின் கீழ் பகுதிகளுக்கு இருண்ட தோற்றத்தை அளிக்கிறது.