105 கிலோ எப்படி 72 கிலோ ஆனது? இணையத்தில் வைரலாகும் சிம்புவின் காணொளி
நடிகர் சிம்புவின் உடல் எடை குறைப்பு குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொரோனா முதல் அலைக்கு முன்பு சிம்பு 105 கிலோ எடையிலிருந்த சிம்பு தற்போது உடல் எடையை குறைத்து சிறு வயது லுக்கிற்கு மாறியுள்ளார்.
இவர் எப்படி உடல் எடையை குறைத்தார் என்ற காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
அதில் நடைபயிற்சி, உடற்பயிற்சி, பரதநாட்டியம், வாள் வீச்சு என உடல் எடை குறைப்பிற்காக பல வழிகளையும் முயற்சி செய்துள்ளார் சிம்பு.
13.40 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் 105 கிலோ இருந்த உடல் எடை எப்படி 72 கிலோ ஆனது என்ற சிம்புவின் விடா முயற்சி, உழைப்பு குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளனர்.
சர்ச்சைகள், கேலிகள் அனைத்தையும் கடந்து இவ்வளவு தூரம் வர அசாத்திய நம்பிக்கை, துணிச்சல், விடா முயற்சி வேண்டும் என ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்து நெகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
இந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் வேகமாகி வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்தாகும்.