தீபாவளி ஸ்பெஷல்: சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி ருசிக்கலாம்
Healthy Food Recipes
By DHUSHI
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக் கூடிய உணவு வகைகளில் ஒன்று பிரியாணி.
அந்த வகையில் அனைவருக்கும் விருப்பமான சுட சுட நாட்டுக்கோழி பிரியாணி செய்வது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- நாட்டுக்கோழி - முக்கால் கிலோ
- சீரகச்சம்பா அரிசி - அரை கிலோ
- பெரிய வெங்காயம் - 200 கிராம்
- சின்ன வெங்காயம் - 100 கிராம்
- தக்காளி - 200 கிராம்
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு - 4 பற்கள் பச்சை
- மிளகாய் - 5
- கொத்தமல்லித் தழை - 2 கைப்பிடி
- புதினா - ஒரு கைப்பிடி
- கெட்டித் தயிர் - கால் கப்
- மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
- பிரியாணி மசாலா- 2 தேக்கரண்டி
- எலுமிச்சை - கால் மூடி
- ப்ரிஞ்சி இலை - 3
- எண்ணெய் - 4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு
தயாரிப்புமுறை
- முதலில் நாட்டுக்கோழியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயம், தக்காளி இரண்டையும் நறுக்கிக் கொள்ளுங்கள்.
- சின்ன வெங்காயம், இஞ்சி, வெள்ளைப்பூண்டு அனைத்தையும் நன்றாக அரைத்து பேஸ்ட் மாதிரி ஆக்கிக்கொள்ளுங்கள்.
- அடி கனமான பெரிய பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி ப்ரிஞ்சி இலை, பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- இதனுடன் இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும், இதனுடன் கொத்தமல்லி, புதினா இலையை சேர்த்து வதக்கிய பின்னர் தக்காளி, பச்சை மிளகாய், தயிர் சேர்க்கவும்.
- இதனுடன் மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து நாட்டுக்கோழியை சேர்த்து கிளறிவிடவும், இதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கோழி வேக விடவும்.
- முக்கால் வாசி வெந்தவுடன், அரிசியின் அளவை விட ஒன்றரை மடங்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
- நன்றாக கொதித்த பின்னர், அரிசியை போட்டு மூடி வைத்து வேகவிடவும், முக்கால் பாதி வெந்தவுடன் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறிவிடவும்.
- தண்ணீர் முழுவதுமாக வற்றிய பின்னர், பிரியாணியை தம் போட்டு கிளறி விட்டால் சுவையான நாட்டுக்கோழி பிரியாணி தயார்!!!
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US