ஆண்டுக்கு ரூ. 3000 கோடிக்கு மேல் வருமானம்.., இந்தியாவின் பணக்கார ரயில் நிலையம் எது?
பொதுமக்களுக்கு சேவை அளிக்கும் நோக்கத்தில் இந்திய ரயில்வே செயல்பட்டு வருகிறது.
ரயில்வே டிக்கெட்டுகளுக்காக ஆண்டுதோறும் மானிய தொகை பல்லாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வழங்கப்படுகிறது.
இதனால் ரயில் பயணிகள் குறைந்த கட்டணத்தில் நிறைவான பயணத்தை பெற்று வருகிறார்கள்.
மொத்தம் 7300 க்கும் அதிகமான ரயில் நிலையங்கள் இந்தியாவில் உள்ளன. நாள் ஒன்றுக்கு 13000 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
நாள்தோறும் சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் இந்த ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள்.
ரயில் டிக்கெட்டுகளை தவிர்த்து பிளாட்பார்ம் டிக்கெட், விளம்பரங்கள், ரயில் நிலையங்களில் வைக்கப்படும் கடைகள், காத்திருப்பு அறைகள், பயணிகளின் உடைமைகளை பாதுகாக்கும் அறைகள் உள்ளிட்டவற்றின் மூலமாகவும் ரயில் நிலையங்களுக்கு வருமானம் கிடைக்கிறது.
அந்தவகையில் இந்தியாவிலேயே அதிக வருமானம் கொண்ட ரயில் நிலையமாக புதுடெல்லி ரயில் நிலையம் உள்ளது.
இங்கு ஆண்டு ஒன்றுக்கு 3300 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2023 - 24 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது.
மேலும் புதுடெல்லி ரயில் நிலையம் அதிகமான பயணிகளை கையாளக்கூடிய ரயில் நிலையங்களில் ஒன்றாக உள்ளது. இந்த ரயில் நிலையத்திற்கு சுமார் 4 கோடி பயணிகள் வந்து செல்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |