விபூதியை பூசுவதால் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா?
விபூதி என்றால் செல்வம் என்று அர்த்தமாம்.விபூதி என்றால் இதைவிட மேலான செல்வம் ஒன்றில்லை என்று அர்த்தமாம்.
நம் முன்னோர்கள் விபூதியை இறைவனை கடத்தும் ஒரு ஊடகமாக பார்க்கின்றனர்.
விபூதியை இறைவனின் மறு உருவமாக பார்க்கின்றனர்.அந்த காலத்தில் பெரியார்கள் நோய்கள் ஏற்பட்டால் விபூதியை மட்டுமே பயன்படுத்துவர்.
இன்றைய காலத்தில் விபூதியை வாங்கிவிட்டு ஒரு கீறு நெற்றியில் வைத்துவிட்டு மிகுதியாக உள்ளவற்றை கீழே போட்டுவிடுகின்றனர்.நாம் விபூதியை கீழே கொட்ட கொட்ட நமக்கு எவ்வழியிலாவது கஷ்டம் வந்துக்கொண்டே இருக்குமாம்.
விபூதியை வைக்கும்பொழுது நமது 3 கை விரல்களில் படுமாறு பரப்பிவிட்டு 'ஓம் நமச்சிவாய' என்று அல்லது ஏதேனும் ஒரு இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு கூறி பூச வேண்டுமாம்.அந்த விபூதி 2 காதுகள் மற்றும் தோளிலும் விழ வேண்டுமாம்.
விபூதியை பூசுவதால் ஏற்படும் பலன்கள் என்ன ?
-
செய்யும் காரியத்தில் வெற்றி பெற வேண்டுமா?பேச்சுத்திறன்,ஞாபக சக்தி,லட்சுமி கடாட்சம்,நோய் நொடியின்றி வாழ வேண்டுமா?மந்திர பூர்வமாக மாற்றப்பட்ட விபூதியை அணியுங்கள்.
-
ஔவையார் பாழாய்ப்போன விடயங்கள் என ஒரு சிலவற்றை கூறுகின்றார்.அவற்றுள் நீர் இல்லாத நெற்றி பாழ் என்னும் கூற்றை கூறியுள்ளார்.
- நமது உடல் எனப்படுவது இறைவன் வாழும் இல்லமாகும்.அப்பேர்ப்பட்ட உடலில் இறைவன் இருக்கவேண்டும் எனில்,நமது மனம் எனும் கோவில் துாய்மையானதாக இருக்கவேண்டும்.அதற்கு திருநீர் அணிவது அவசியம்.
- நாம் பூசும் விபூதி தூய விபூதியாக அதாவது மாட்டு சாணத்தில் செய்யப்பட்ட விபூதியாக இருத்தல் வேண்டும்.
-
வேலைக்கு செல்பவர்கள் அல்லது பாடசாலை செல்பவர்கள் எனில் வீட்டில் இருக்கும்போது நெற்றி நிறைய விபூதி பூசிக்கொள்ளலாம்.
- பிராதோஷம் அல்லது சிவராத்திரி,சஷ்டி போன்ற விசேட நாட்களில் கோவில் பூசாரியிடம் கூறி உங்களிடம் உள்ள திருநீற்றை பூசித்து பெற்றுக்கொள்ளலாம்.
விபூதியை எவ்வாறு பூசுவது?
தினமும் காலையில் குளித்துவிட்டு,விளக்கு ஏற்றிவிட்டு, உங்கள் இஷ்ட தெய்வத்தை வேண்டிக்கொண்டு இன்றைய நாள் எனக்கு சிறப்பாக அமைய வேண்டும்,நாள் முழுதும் நீங்கள் என்னோடே இருக்க வேண்டும், என கூறி விபூதியை அணிந்துப்பாருங்கள்.மாற்றத்தை உங்களால் உணர முடியும்.