நுங்கு சாப்பிடுவதால் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
Cancer
Constipation
Immunity
Anemia
Acidity
Skin Problem
Lose weight
Body Heat
By Kishanthini
பனை மரத்திலிருந்து பல வகையான பயனுள்ள பொருட்களை நாம் பெறுகின்றோம்.
பனை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய பனவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, பதநீர் அதன் வரிசையில் நுங்கும் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது.
இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து, கால்சியம், ஜிங்க், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்களும் உள்ளன. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றது.
அந்தவகையில் நுங்கு சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- நுங்கு வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.
- பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு.
-
பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.
- உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும்.
- கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
- இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.
- நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது
- பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.
- நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது.
- கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.
- பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.
- நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US